எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 2 174

சங்கீதா ஆத்திரத்தில் அறிவில்லாமல் படபடவென பொரிந்து தள்ள, பெற்றோர்கள் இருவரும் ஸ்தம்பித்துப் போய் அவளை பார்த்தார்கள். தங்கையின் வார்த்தைகள் அசோக்கின் மனதை குத்திக் கிழிக்க.. அமைதியாக.. எதுவும் பதில் பேச தோன்றாதவனாய்.. ஒருவித வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தான்..!! அல்வாவை ஸ்பூனால் விண்டு எடுத்தவன், பிறகு அதை உதட்டுக்கு எடுத்துச் செல்ல வலுவில்லாது போன மாதிரி மீண்டும் தட்டிலேயே போட்டான். மகனின் மனக்காயத்தை பட்டென புரிந்து கொண்ட பாரதி, அவனுடைய முகத்தையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எனக்கு போதும் மம்மி..!! தூக்கம் வருது.. நான் போய் படுக்குறேன்..!!”

அசோக் அமைதியாக சொல்லிவிட்டு, எழுந்து உள்ளே சென்றான். சங்கீதாவுக்கு உண்மையிலேயே அவள் செய்த தவறு புரியவில்லை. அசோக் தனது குரலை கேலி செய்வதும், தான் அவனது விளம்பரத்தை கேலி செய்வதும் மாதிரியேதான் இதையும் நினைத்தாள். தான் வீசிய வார்த்தைகள் எந்த அளவிற்கு அண்ணனின் மனதை புண்படுத்தியிருக்கும் என்று புரிந்து கொண்டாள் இல்லை. அதனால்தான் அவன் அவ்வாறு எழுந்து சென்றபோது,

“என்ன ஆச்சு இவனுக்கு திடீர்னு..??” என்று அம்மாவிடம் குழப்பமாக கேட்டாள். பாரதியோ பதிலுக்கு சீறினாள்.

“பேசுறதெல்லாம் பேசிட்டு என்னாச்சுன்னா கேக்குற..?? இன்னைக்கு அவன் பொறந்த நாளுடி.. இன்னைக்குப் போய் இப்படிலாம் பேசி.. அவனை..!! வாய்.. வாய்.. அப்படி வாய் உனக்கு..!! அந்த கொழுப்பெடுத்த வாயை அப்படியே கோணூசி வச்சு தைக்கணும்..!!”

படபடவென சொல்லிவிட்டு, அல்வா தட்டை எடுத்துக்கொண்டு கிச்சனுக்கு நகருகிற அம்மாவையே, சங்கீதா எரிச்சலாக பார்த்தாள். பிறகு அப்பாவிடம் திரும்பி முறையிட்டாள்.

“பாருங்க டாடி மம்மியை..!! அவன் ஏதோ லூசுத்தனமா பண்ணதுக்கு.. என்னைப் புடிச்சு திட்..!!’ சங்கீதா சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“இல்லம்மா சங்கீதா.. நீ பேசுனது ரொம்ப தப்பு..!! அண்ணன்ட்ட அப்படிலாம் இனிமே பேசாத..!!”

மணிபாரதி அமைதியாக சொல்லிவிட்டு எழுந்து சென்றார். அப்பாவும் அந்த மாதிரி சொன்னதும்தான், ‘நிஜமாகவே நான் செய்தது தவறுதானோ..?’ என்ற சந்தேகமே சங்கீதாவுக்குள் எழுந்தது..!!

தனது அறைக்குள் நுழைந்த அசோக், விளக்கை கூட அணைக்காமல், வேறு உடை அணிந்து கொள்ளவும் தோன்றாமல், அப்படியே படுக்கையில் விழுந்தான். கண்களை இறுக்கி மூடிக்கொண்டான். சங்கீதா சிந்திய வார்த்தைகள் இன்னும் அவன் இதயத்தில் ஊசி போல பாய்ந்து, சுருக் சுருக்கென குத்திக் கொண்டிருந்தன. மூச்சை சீராக உள்ளிழுத்தும் வெளியிட்டும்.. துடிக்கிற நெஞ்சை அமைதிப்படுத்த முயன்றுகொண்டிருந்தான்..!!

“பொண்ணுககிட்ட எப்படி பேசனும்னே தெரியாதா உனக்கு..??”

அசோக் ப்ளஸ் டூ படிக்கையில், அவனுடன் படித்த இரட்டை ஜடை போட்டிருக்கும் ஒரு பெண், இவனை கேவலமாய் ஒரு பார்வை பார்த்தபடி வீசிவிட்டு சென்ற வார்த்தைகள், ஏனோ இப்போது அவன் காதுக்குள் ஒலித்தன. அந்தப் பெண்ணின் பெயர் கூட இப்போது அசோக்கிற்கு நினைவில்லை. ஆனால் அவள் உதிர்த்து சென்ற வார்த்தைகள் இன்னும் அவன் உள்ளத்துக்குள் உயிரோடிருக்கின்றன.

சில நிமிடங்கள் அவ்வாறு அமைதியாக சலனமில்லாமல் கிடந்திருப்பான். பிறகு அவனது தலைமுடியை யாரோ வருடுவது போலிருக்க, இமைகளை திறந்து பார்த்தான். அவனுக்கு அருகே பாரதி அமர்ந்திருந்தாள். காயப்பட்டு கிடக்கிற மகனையே பரிவுடன் பார்த்தபடி இருந்தாள்.

“எ..என்ன மம்மி..??”

“அவ ஏதோ வெளையாட்டுத்தனமா பேசிட்டா அசோக்.. அதெல்லாம் மனசுல வச்சுக்காத..!!”

“இ..இல்ல மம்மி.. அப்படிலாம் ஒன்னும் இல்ல.. எனக்கு எதும் வருத்தம்லாம் இல்ல..!!” அசோக் புன்னகையுடன் பொய் சொன்னான்.

“ம்ம்.. உனக்கு எதும் வருத்தம் இல்லன்னா சரிதான்..!!”

“அவ சொல்றதும் சரிதான் மம்மி.. எனக்குலாம் அரேஞ்ட் மேரேஜ்தான் சரி.. என்னல்லாம் எவ லவ் பண்ணுவா..??” அசோக் அந்தமாதிரி சுய இரக்கத்துடன் சொல்ல, பாரதிக்கு பொசுக்கென்று கோவம் வந்தது.

“இப்படிலாம் அறிவில்லாம பேசினா.. அறைஞ்சு பல்லை உடைச்சிடுவேன் அசோக்..!! பேசுற பேச்சைப் பாரு..!! உனக்கு என்னடா கொறைச்சலு..?? உனக்கு லவ் பண்ண தகுதி இல்லன்னா.. உலகத்துல யாருக்குமே அந்த தகுதி இல்லன்னு அர்த்தம்..!!”

அம்மா அந்தமாதிரி கோவப்பட்டது அசோக்கிற்கு மிகவும் இதமாக இருந்தது. அந்த கோவத்திற்குள் புதைந்திருந்த அவளது அதீத அன்பை அவன் உணர்ந்துகொண்டதுதான் அதன் காரணம். மெல்ல உதடுகள் பிரித்து கொஞ்சமாய் சிரித்தான். பிறகு சற்றே புரண்டு, அம்மாவின் இடுப்பை சுற்றி இரண்டு கைகளையும் போட்டு அவளை அணைத்துக்கொண்டு, அவள் மடிமீது தலைசாய்த்து படுத்துக் கொண்டான். பாரதி மென்மையாக அவன் தலைமுடியை கோதிவிட, அசோக் மெலிதான குரலில் சொன்னான்.

“எனக்கு இந்த லவ்லாம் வேணாம் மம்மி..!! நீயே ஏதாவது ஒரு பொண்ணு பாரு.. உனக்கு புடிச்சிருந்தா போதும்.. நான் கட்டிக்கிறேன்..!!”

1 Comment

  1. நான் என்னுடைய தமிழ் செக்ஸ் சிறு கதைகளை வெளியிட விரும்புகிறேன். வழிகாட்டுதல்கள்.

Comments are closed.