எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 2 30

பிறகு நாடகம் முடியும்வரை.. அவ்வாறே இருவரும் இரவு முழுவதும்.. ஊர்மக்கள் சூழ்ந்திருக்க கண்களால் காதலித்துக் கொள்வார்கள்..!! நாடகம் முடிந்தபின்.. அதிகாலை இருளில்.. மேடைக்கு பின்புறமாக.. தனிமையில்.. தயங்கி தயங்கி கைவிரல்கள் கோர்த்துக்கொண்டு.. காதல்மொழி பேசிக்கொள்வார்கள்..!! ஜமீன்தார் தனது சொந்த செலவில் நிறைய நாடகங்களுக்கு ஏற்பாடு செய்ய.. இவர்களது காதலும்.. மேடைக்கு முன்பாகவும், பிறகு பின்பாகவும்.. தங்கு தடை இல்லாமல் வளர்ந்து வந்தது..!!

பிறிதொரு நாளில்.. வேலன் வேடத்திற்கும், வேடன் வேடத்திற்கும் இடைப்பட்ட தருணத்தில்.. உடை மாற்றுவதற்காக பனைஓலை தடுப்புக்கு அப்பால் சென்ற நாராயணசாமி.. ‘கறை.. தேடினாலும் கிடைக்காது..’ என்பது மாதிரி காணாமல் போனார்..!! ‘வள்ளியம்மை.. அச்சு முறுக்கு வாங்கிட்டு வர்றேன்.. எடத்தை பாத்துக்க..’ என்றுவிட்டு எழுந்து சென்ற கோமளவல்லியும்.. ‘ஏய்.. எனக்கு ரெண்டு எள்ளு உருண்டைடி..!!’ என்று ஆசையாக சொன்ன உற்றதோழிக்கு.. உருண்டை வாங்கி வராமலேயே ஊரைவிட்டு தொலைந்து போனாள்..!! நாராயணசாமியும், கோமளவல்லியும் சென்னைக்கு வந்து செட்டில் ஆகி.. பிற்காலத்தில் அசோக்குக்கு தாத்தாவும் பாட்டியுமாய் ஆகிப்போனார்கள்..!!

சரி.. இதற்கும் அந்த ஊரில் ஐம்பது வருடங்களாக கலைநிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா..?? சொல்கிறேன்..!! இவர்கள் காணாமல் போனதற்கு இரண்டு நாட்கள் கழித்து.. ஜமீன்தாருக்கு சாமி அருள் வந்துவிட்டது..!! மகள் போனதால் வந்த துக்கத்திலும்.. தானே தனக்கு சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டதை, நினைந்து நினைந்து குமைந்து வெந்த ஆத்திரத்திலும்.. ‘டேய்ய்ய்.. ஆத்தா வந்திருக்கேண்டா.. இனிமே எனக்கு விழா எடுக்குறேன்ற பேர்ல.. எவனாவது கூத்து, நாடகம்ன்னு கும்மாளம் போட்டிங்க.. எல்லாரையும் க்ளோஸ் பண்ணிப்புடுவேன்.. க்ளோஸ் பண்ணி.. ராஸ்க்கெல்ஸ்..!!’ என்று சூலாயுதத்தை சுழற்றியவாறு ஜமீன்தார் உக்கிரமான குரலில் கத்தி எச்சரிக்க.. அம்புட்டுத்தேன்..!!!!

தாத்தாவையும் பாட்டியையும் விரட்டி அடித்துவிட்டு, அசோக் சோபாவில் வந்து அமர்ந்தான். கால்களை அகட்டி ‘பப்பரக்கா’ என்று அமர்ந்தவன், டிவியை ஆன் செய்வதற்காக ரிமோட் எடுக்கப் போக, படக்கென்று ஒரு கை அந்த ரிமோட்டை எட்டி எடுத்தது. அசோக்கின் அருகில் ஜம்மென்று வந்து அமர்ந்தாள் அவன் தங்கை சங்கீதா. சற்றுமுன் தாத்தா பாட்டியை முறைத்த மாதிரி, அசோக் இப்போது தங்கையை திரும்பி முறைக்க, அவள் டிவியை ஆன் செய்து VH1 சேனல் வைத்தாள். ‘ஹிட் மீ பேபி.. ஒன் மோர் டைம்..!!’ என்று அர்த்த ராத்திரியில் அலறிய பிரிட்னி ஸ்பியர்சுடன், ‘ஓ.. பேபி.. பேபி..’ என்று லாவகமாக ஜாயின் செய்து கொண்டாள். அருகில் அமர்ந்து தன்னை முறைத்துக்கொண்டிருக்கும் அண்ணனை, கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் தலையை மெலிதாக அசைத்து அனுபவித்து பாட ஆரம்பித்தாள். இப்போது அசோக் வாயைத் திறந்தான்.

“ஒய்.. என்ன.. கண்டுபிடிக்க முடியாதுன்னு நெனைக்கிறியா..??” என கிண்டலான குரலில் கேட்டான்.

“எ..என்ன உளர்ற.. எதை கண்டுபிடிக்க முடியாதா..??” சங்கீதா அசோக்கை பார்த்து குழப்பமாக கேட்டாள்.

“என்னதான் ஆயிரம் குயில்களுக்கு மத்தில கூவ ட்ரை பண்ணாலும்.. காக்காவோட வாய்ஸ் தனியா காட்டிக் கொடுத்துடும் சிஸ்டர்.. கண்டுபிடிக்கிறது ரொம்ப ஈஸி.. ஹாஹா..!!” சொல்லிவிட்டு அசோக் சிரித்தான். அவ்வளவுதான்.. அண்ணனின் நக்கலில் சங்கீதா இன்ஸ்டன்டாய் டென்ஷன் ஆனாள்.

“யாருடா காக்கா.. யாரு காக்கா..?? குடிக்காரப்பயலே..!!” என்று அவன் தலையில் குட்டு வைக்க முயன்றாள்.

1 Comment

Add a Comment
  1. நான் என்னுடைய தமிழ் செக்ஸ் சிறு கதைகளை வெளியிட விரும்புகிறேன். வழிகாட்டுதல்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *