இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 4 66

“இந்த பீச் மண்ணுகிட்ட கேளுங்க எங்க லவ் பத்தி, கடலே வத்தி போகுற வரை எங்க காதல் கதையை பத்தி சொல்லும்.. இந்த பீச்சுக்கு வர்ற கப்பில்ஸ் லாம் அவங்களுக்குள்ள ரொமான்ஸ் பண்றத மறந்து, நாங்க பண்ணிக்குற ரொமான்ஸ் தான் பாத்து ரசிப்பாங்க.. கடைசில நான் கல்யாணத்தை பத்தி பேசும் போது அவளோட பிலோசோபி, மனசு வேற, உடம்பு வேற அது இதுன்னு ஒரு குண்டை தூக்கி போட்டா. அது எனக்கு ஒத்து வரல, சோ அந்த இடத்துல தான் நாங்க பிரேக் அப் ஆனோம்..”

மற்ற காதல் ஜோடிகளே பொறாமை கொள்ளும் அளவு ரொமான்ஸ் என்றால், எந்தளவு தன் காதலியிடம் அவன் விளையாடி இருப்பான் என கிஷோரின் மனதுக்குள் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தது.

“ச்சா!!! இப்போ ஏன் டா பழசை பத்தி லாம் பேசிட்டு இருக்க.. இப்போ எதுக்கு இங்க வந்த.. என்ன வேணும் உனக்கு..”

“உன்கூட கொஞ்ச நேரம் பேசிட்டு போலாம் ன்னு தான் வந்தேன் டி”. என்று சொல்லிக்கொண்டே அவள் முதுகை சுற்றி அவள் இடுப்பில் கையை வைத்தான்.

அவன் கையை தன் இடுப்பில் இருந்து அகற்றுவதற்காக அவன் கையை பிடித்தவள், திடீரென மனதில் எதோ தோன அவன் கையை விளக்கி விடாமல் அப்படியே பிடித்துக் கொண்டு கிஷோரை முகத்தை கூர்ந்து கவனித்தாள்.

பாவம் கிஷோர். எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ ஒருவன் வந்து தன் காதலியின் தோளில் கை போடுவதும், கன்னத்தில் முத்தமிடுவதும், இடுப்பை பிடித்து அனைப்பதும் என அவன் முகத்தில் சோகத்தை குடி புக வைத்தது. இருந்தாலும் சற்று முன்னர் கலை அவனுக்கு கொடுத்த வாக்கு, “என் மனசு எப்போவும் உனக்கு தான் டா” அந்த ஒரு சொல் அவனுக்கு போதுமானதாக இருந்தது.

கிஷோரின் முகத்தை கலை கூர்ந்து கவனிக்க அதில் சின்ன வருத்தம் தென்பட, அவனை ஏமாற்றத்துடன் கேள்வியாக பார்த்தாள், அந்த பார்வை கேட்கும் கேள்விகள் கிஷோரால் எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது.

என்னோட மனசு மட்டும் போதும் ன்னு சொன்னியே டா. இப்போ என் இடுப்புல ஒருத்தன் கை வைக்கிறான் ன்னு தெரிஞ்சதும், உன் முகத்துல ஏன் டா இந்த சோகம். என்னை முழுசா புரிஞ்சுகிட்டு என்னை ஏத்துக்கிட்டவன் நீதான், என்னோட வாழ்க்கை மொத்தமும் உன்கூட இருக்கணும் ன்னு நான் நினைச்சுட்டு இருக்கும் போது, நீயும் சராசரி ஆம்பளை மாதிரி பொசெஷிவ்னெஸ் ன்னு ஒரு சுயநல வியாதியை வெளிப்படுத்துறியே கிஷோர், என்னை ஏமாத்திடாத டா கிஷோர்.

கலையின் ஒற்றை பார்வை சொன்ன வார்த்தைகளும், அவள் முகத்தில் தென்பட்ட ஏமாற்றமும், கிஷோரின் மனதுக்குள் இருந்த கொஞ்சநஞ்ச பொசெஷிவ்னெஸ் குணத்தை வேரோடு பிடிங்கி எரிந்தது.

கிஷோர் பதிலுக்கு அவளிடம் பார்வையில் மன்னிப்பு கேட்டுவிட்டு, மகிழ்ச்சியான புன்னகையை உதட்டில் சிந்த, அதை பார்த்த பின்னரே முகுந்தின் கையை தன் இடுப்பில் இருந்து எடுத்தாள்.

1 Comment

  1. Why part are uploading to late…make it soon and upload as much possible when the day starts.

Comments are closed.