இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 4 66

“இல்லப்பா எனக்கும் அந்த பொண்ணுக்கும் ஒத்து வருமா என்னனு தெரியல. அதுபோக நான் பிடிச்சுருக்கு ன்னு சொல்லியும் அவ எதுவும் சொல்லல. சும்மா பழகி பாப்போம் ன்னு தான் சொல்லுறா”

“பரவால்லயே சரியா தான் சொல்லிருக்கு அந்த பொண்ணு. உனக்கு தான் அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சுபோச்சுல்ல, அது சொல்ற மாதிரி பழகு, அந்த பொண்ணு மனசு நோகாம நடந்துக்கோ..”

“ம்ம்ம் சரிப்பா.. அம்மா எங்க தம்பிய காணோம்”

“அவன் காலங்காத்தாலயே வனிதா வீட்டுக்கு போயிட்டான் டா.”

அடுத்து ஊர் கதைகள் மூவர் வாயிலும் சென்று வர மூவரும் சாப்பிட்டு முடித்தனர். தன் அறைக்கு சென்ற கிஷோர் விட்டுப் போன தூக்கத்தை தொடர்ந்தான்.

நேரம் மாலை 6:20

சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காதல் ஜோடிகள். துப்பட்டாவுக்குள் ஒளிந்திருக்கும் கைகள், எச்சில்களை பரிமாறிக் கொள்ளும் உதடுகள், குதிரையில் ரோந்து வரும் காவல்துறை, ஜோடிகளை தேடி பார்த்து வியாபாரம் செய்யும் சுண்டல் விற்கும் சிறுவன், மல்லிகை பூ விற்கும் வயதான பெண்மணி என சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்த திருவான்மியூர் கடற்கரையில் அந்த அழகான சூரிய அஸ்தமனத்தை கிஷோரும், கலையும் அமைதியாக பார்த்து கொண்டிருந்தார்கள்.

“ஹே என்ன கிஷோர் வந்ததுல இருந்து வெறும் நாலு வார்த்தை மட்டும் தான் பேசின, மாலுக்கு வர வேண்டாம் ன்னு சொல்லிட்டு ஏன் பீச்சுக்கு வர சொன்னேன் ன்னு யோசிக்கிறியா?”

“இல்ல கலை நான் அது பத்தி யோசிக்கல, ஏன்னா இது ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு”

“ஹாஹா, பாரு நம்ம டேஸ்ட் ஒன்னு போல இருக்குல்ல, சரி அது இருக்கட்டும், நானும் பாத்துட்டே இருக்கேன், வந்ததுல இருந்து நீ என்னை கொஞ்சம் கூட சைட் அடிக்காம வெறும் கடலையே வெறிச்சு பாத்துட்டு இருக்குறத பாத்தா, என்கிட்டே எதோ சொல்லணும் ன்னு வந்து சொல்ல முடியாம கஷ்ட படர மாதிரி இருக்கு, வாய திறந்து பேசு”

1 Comment

  1. Why part are uploading to late…make it soon and upload as much possible when the day starts.

Comments are closed.