மனைவியின் ஏக்கம் Part 5

“நான் மறுபடியும் உங்களை குறை சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள், அனால் இதற்கு கரணம் நீங்கள் தான்.”

“நான் உனக்கு துரோகம் செய்ததை சொல்கிறாயா?”

“அது விளைவு, காரணம் கிடையாது.”

அவர் ஒரு கேள்விக்குறியோடு என்னை பார்த்தார்.

“இதற்கெல்லாம் நீங்கள் தான் காரணம். உங்கள் அன்பு பாசம், நீங்கள் என்னை மகிழ்ச்சியில் மூழ்க வைத்த விதம். இது எல்லாம் அதற்கு காரணம்.”

“நான் என் பெற்றோர்கள் மறந்தேன், என் உறவினர்களை மறந்தேன், என் நண்பர்களை மறந்தேன். நீங்கள் மட்டும் என் உலகம் என்று இருந்தேன்.”

அவருக்கு மெல்ல நான் சொல்லவந்தது புரிய துவங்கியது. என் வார்த்தைகளில் உள்ள நேர்மை அவர் உணரவேண்டியது அவசியமானது. என் மணவாழ்வின் எதிர்காலமே அதில் அடங்கி இருந்தது.

“அதே போல் நான் மட்டுமே உங்களுக்கு எல்லாம் என்று பூரித்து போய் இருந்தேன்.” “அன்றைக்கு அந்த சம்பவம் பார்த்த போது (நீங்கள் கள்ள உடலுறவு கொள்வதை என்று கூட என் வாயால் சொல்ல வரவில்லை.) என் உலகமே என் கண்கள் முன்னே நொறுங்கி விழுந்தது.”

நான் இப்போது மெதுவாக அழ துவங்கினேன். அந்த நினைவு இன்னமும் என் இதயத்தில் அந்த தாக்கத்தை உண்டு பண்ணியது. நான் சிரமப்பட்டு என் அழுகையை அடக்கிக்கொண்டேன். சிவந்த கண்களுடன் மெல்ல நிமிர்ந்து அவர் முகத்தை பார்த்தேன். அவர் முகத்தில் என் மேல் உள்ள பரிவு தெரிந்தது.

“உங்கள் மேல் அளவுக்கு அதிகம் அன்பு வைத்திருந்ததால் என் வலியும் அதே போல் இருந்தது.”

“அந்த நாட்களில் என் முழு நிதானமும் இழந்தேன். நான் என்ன செய்கிறேன் எப்படி நடகிறேன் என்ற எண்ணங்கள் எல்லாம் ஒரு குழப்பமான நிலையிலேயே போனது.”

“அதற்காக நான் செய்ததை நியாயப்படுத்தவில்லை. நான் செய்ததுக்கு எனக்கு என்ன தண்டனை வேண்டுமென்றாலும் நீங்கள் கொடுக்கலாம்.”

“உங்கள் வாழ்க்கையில் இருந்து என்னை ஒதுக்கிவிடாதீர்கள் என்று கெஞ்ச கூட எனக்கு அருகதை இல்லை என்று தெரியும்.”

“இனி நீங்கள் தான் முடிவு எடுக்கணும். ஒன்று மட்டும் உறுதி நீங்கள் இல்லாத வாழ்கை எனக்கு நரகம் தான். அப்படி நடந்தால் நான் செய்ததுக்கு அது தகுந்த தண்டனை தான்.”

நான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிவிட்டேன். இனி முடிவு அவர் கையில். இது வரைக்கும் நாங்கள் இருவரும் நின்றபடியே பேசிக்கொண்டு இருந்தோம்.

“வா சுவேதா வந்து இங்கே உட்காரு,” என்றார்.

அவர் சோபாவில் உட்கார்ந்து என்னை அவர் பக்கத்தில் உட்காரும்படி செய்கை செய்தார். நான் தயங்கியபடி அவர் பக்கத்தில் சென்று உட்கார்ந்தேன். அவர் என் முகத்தையே சில வினாடிகளுக்கு பார்த்து கொண்டிருந்தார். என் இதய துடிப்பு அதிகரித்து கொண்டு போனது. அவர் என்ன சொல்வது என்று ஆழ்ந்து யோசிக்கிறார் என்று தோன்றியது. என்னை ரொம்ப நோகடிக்காமல் எப்படி நிராகரிப்பது என்று யோசிக்கிறாரோ என்ற பயம் என்னை ஆட்கொண்டது.

நான் கட்டுப்படுத்த முயற்சித்தாலும் என் உடல் நடுங்க துவங்கியது. இப்போது அவர் பேசுவதுக்கு வாயை திறந்தார்.

அவர் என் கைகளை அவர் கைகளில் பற்றி கொண்டு பேச துவங்கினார். என் கை நடுக்கம் இன்னும் அடங்கவில்லை. என் பயத்தை தணிய செய்வது போல் ஆறுதலாக என் கைகளை அழுத்தினார்.

“சுவேதா, நம் சமுதாயத்தில் ஒரே தப்புக்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறு எதிர்வினை இருக்கும் என்று உனக்கு தெரியாத?”

“ஒரு ஆண் வேறு வேறு பெண்ணுடன் உடலுறவு கொண்டாலும், அதே நேரத்தில் அவன் குடும்பத்தை கவனித்து கொண்டால் போதும். அவன் செய்த தவறுகளை அந்த மனைவி பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பாக்கும்.”

“அதிலும் அந்த ஆண் பிறகு திருந்தினாள் அந்த மனைவி அவனை ஏற்று கொள்வது மட்டும் இல்லை அவன் திருந்தியதற்கு அவள் நன்றியுடன் இருக்க வேண்டும்.”

இப்போது என் குனிந்த தலையை உயர்த்தாமல் என் கண்களை மட்டும் உயர்த்தி அவர் முகத்தை பார்த்தேன்.

“அது மட்டும் இல்லை, அவன் குடும்பமும் அந்த பெண்ணின் குடும்பமும் அவனை மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்வார்கள்.”

“அதுவே அந்த மனைவி தப்பு செய்தால். அவளுக்கு எப்போதுமே மன்னிப்பு கிடையாது. எங்கேயோ ஒரு சில குடும்பங்களில் இந்த மாதிரி சூழ்நிலையில் அந்த மனைவிக்கு மன்னிப்பு கிடைத்து இருக்கலாம். அனால் பெரும்பாலும் அது நடக்காது.”

“மானம் கெட்டவளே, வேசி என்று திட்டி அவளை வீட்டை விட்டு விரட்டிவிடுவார்கள். அவள் கணவன் வீட்டில் தான் அப்படி என்றல் அவள் பெற்றோர்களும் பெரும்பாலும் அவளை ஏற்று கொள்ளமாட்டார்கள்.”

அவர் சொல்வது உண்மை என்றாலும் அதுவே இங்குள்ள பெண்களின் தலை எழுத்து. அனால் அவர் என்ன சொல்ல வரார் என்று இன்னும் எனக்கு புலன்படவில்லை.

“துரோகத்தால் அந்த ஆணுக்கு வரும் வலிக்கும் அவமானத்துக்கும் மதிப்பு கொடுக்கும் சமுதாயம் அந்த பெண் அனுபவிக்கும் வேதனைக்கும், அவமானத்துக்கு எந்த மதிப்பும் கொடுப்பதில்லை.”

“நானும் அதேபோல் இருப்பேன் என்று நினைச்சியா?”

இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அப்படியே மெளனமாக இருந்தேன்.

“நீ என் மேல் எந்த அளவு அன்பு வைத்து இருந்த என்று எனக்கு நல்ல தெரியும். நான் எப்படி வேதனையில் துடித்தேனோ அதே போல தானே நீயும் துடித்திருப்பாய்.”

அவர் வேதனையில் துடித்தேன் என்று அவர் சொல்லும் போது என் இதயத்தில் ஈட்டி துளைத்தது போல் இருந்தது. அவரை என் மார்போடு அனைத்து கொள்ள ஏங்கினேன் அனால் அவ்வாறு அப்போது செய்ய முடியவில்லை என்று நொந்துபோனேன்.

“நடந்த எல்லாத்துக்கும் என் செயல் தான் மூல காரணம் அனால் நீ மட்டும் குற்றவாளியாக இங்கே உட்கார்ந்து இருக்க. இதில் என்ன நியாயம் இருக்கு.”

இப்போது சொட்டும் என் கண்ணீர் என் கைகளை பற்றி இருக்கும் அவர் கைகள் மேல் விழுந்தது.

2 Comments

  1. Such a super story ethanaiyo story padichurukken idhu dhaa yaah the best best stry 🫡really really hatsoff en life la yae naan padicha best kamakadhai idhu onnu mattum dhaa dear writer Nee great yaah

  2. Such a super story ethanaiyo story padichurukken idhu dhaa yaah the best best stry 🫡really really hatsoff en life la yae naan padicha best kamakadhai idhu onnu mattum dhaa dear writer Nee great yaah

Comments are closed.